May 27, 2025 18:17:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் பொது மக்களுக்கு இலவச ‘என்டிஜன்’ பரிசோதனை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை விரைவான ‘என்டிஜன்’ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக செய்யப்படும் இந்த ‘என்டிஜன்’ சோதனைகள் பொரளை கெம்பல் மைதானத்தில் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்தார்.

கொவிட் அறிகுறிகள் உள்ள எவரும் இந்த சோதனைகளை செய்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இன்று பதுளை நகரில் நடமாடியவர்களுக்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட விரைவான ‘என்டிஜன்’ சோதனைகளில் 37 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.