ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னத்தை மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (15) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வெற்றிலை அடையாளத்தின் கீழ் ஒரு புதிய சின்னத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் குறித்து புதிய கொள்கைகளை வகுப்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.