தற்போதைய ஆய்வுகளில் நாட்டில் முழுமையாக டெல்டா வைரஸ் ஆக்கிரமிப்பு நிலையொன்றே காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் நாட்டை திறப்பது சாதகமான நிலைமையை ஏற்படுத்துமா? என்பது சந்தேகமே எனவும், இதனால் நாடு திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பொதுப்போக்குவரத்து விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தப்படும் வேளையில் கண்டிப்பாக சமூக இடைவெளி உள்ளிட்ட சகல சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பலவீனமான சுகாதார கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினசரி கொவிட் தொற்று எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் திங்கட்கிழமைக்கு பின்னர் நாட்டை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே நேற்று தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.