January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கட்டுப்பாடுகள் இன்றி நாட்டை திறக்க வேண்டாம்”: மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை!

நாட்டை முழுமையாக திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை என்று சுகாதார வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டை திறந்தால், மிக மோசமான இன்னொரு கொவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பலவீனமான சுகாதார கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாக இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை, ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர், ஒரு வாரத்தில் பத்தாயிரத்திற்கு அதிகமான வைரஸ் தொற்றாளர்களும், ஆயிரம் அல்லது ஆயிரத்தையும் தாண்டிய வாராந்த கொவிட் மரணங்களும் இன்னும் நாட்டில் பதிவாகிக்கொண்டிருக்கின்றது என்று என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில். இது சாதாராண நிலைமை அல்ல, நாம் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட முடியும் என்றோ அல்லது நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது என்றோ எம்மால் ஒருபோதும் கூறிவிட முடியாது எனக் கூறியுள்ள இலங்கை வைத்தியர்கள் சங்கக்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, நாம் இப்போதும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே உள்ளோம் எனக் கூறியுள்ளார்.