January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர் கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நீர் விநியோக கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தடையற்ற நீர் விநியோகத்துக்கு சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி திலின எஸ். விஜேதுங்க கூறினார்.

கொவிட் -19 தொற்று பரவல்  காரணமாக தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும் நுகர்வோர் தங்கள் நீர் கட்டணத்தை செலுத்தாது தாமதித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுவலகங்களிலோ அல்லது இணைய வங்கி சேவைகள் மற்றும் தெலைபேசி இணைப்புகளின் ஊடாகவோ நீர் கட்டணத்தை கட்டமுடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை 011 2 623 623 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி திலின எஸ். விஜேதுங்க தெரிவித்தார்.