
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் வெளியக தலையீடுகள் வருவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போது, சீன பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐநா 46 1 தீர்மானத்துக்கு அமைய ஐநா கண்காணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சீனா இதனைத் தெரிவித்துள்ளது.
ஐநா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியக தலையீடுகளை நிராகரிப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் ஐநா அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.