அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க வெளியுறவு சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.
60 வயதை அடைந்த ரவிநாத் ஆரியசிங்க நேற்று வெளியுறவு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவர் நேற்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார்.
ரவிநாத் ஆரியசிங்க 2020 டிசம்பர் மாதம் முதல் ஒன்பது மாதங்கள் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டுள்ளார்.