May 2, 2025 12:29:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வெளிநாடுகளின் இருந்து வருவோரிடம் பணமோசடி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்”; கெஹெலிய

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக உட்படுத்துகின்ற போது பணமோசடி இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்களில் உண்மை இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாகவும், சுட்டிக்காட்டப்படும் எந்தவொரு தவறையும் திருத்துவதற்கு  அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற விசேட மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனை கூறியுள்ளார்.