November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘கறுப்பு பூஞ்சை’ தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

அண்மைக் காலமாக இந்தியாவில் அதிகளவில் இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது இலங்கையிலும் நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லையெனவும் சுகாதார தரப்பு கூறியுள்ளது.

இலங்கைக்கு இந்தத் தொற்று புதியது அல்லவெனவும், ஏற்கனவே இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.