
தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்துக்கு மின் விசிறி ஒன்றை வழங்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மெகசின் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பி, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசேட கைதிகளைத் தடுத்து வைக்கும் சிறைக் கூடத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், சுகாதார காரணங்களைக் கருத்திற்கொண்டு, மின் விசிறியொன்றை வழங்குமாறு ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவருக்கு மின் விசிறியொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெகசின் சிறைச்சாலையில் மருத்துவர் ஒருவரது கடமைக்கு தொந்தரவு செய்தமை மற்றும் கையடக்க தொலைபேசி பாவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களும் ரிஷாட் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.