
இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜே.டி. மான்னப்பெரும பதவி விலகியுள்ளார்.
குறித்தப் பதவியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் கையளித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயர்மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து தான் திருப்தியடைவில்லை என்று கலாநிதி ஜே.டி. மான்னப்பெரும தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.