பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு இனியும் எண்ணக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை அரசை சர்வதேச கண்காணிப்பு பொறிக்குள் சிக்க வைத்து கடும் அழுத்தங்களை கொடுத்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் வாய்மூல அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொறுப்புக் கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.தீர்மானத்தின் பரிந்துரைகளையும்,ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.