July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் கம்ஸாயினி குணரட்ணம் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு

இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் கம்ஸாயினி குணரட்ணம் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயின் மிகப்பெரிய கட்சியான தொழிற்கட்சியின் ஊடாக, இவர் தலைநகர் ஒஸ்லோவில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.

மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.

பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி, 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

கம்ஸி என அரசியல் அரங்கில் அறியப்பட்ட கம்ஸாயினி, மூன்று வருடங்களுக்கு முன்னர் அவரது பெயரை அவ்வாறே (கம்ஸி) மாற்றிக்கொண்டுள்ளார்.