January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் ரிட் மனு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதுதொடர்பான ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அஜித் நிவாட் கப்ராலைக் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ரிட் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதில் பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.