July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எதிர்வரும் வாரத்தில் நாட்டை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” – சுதர்ஷனி

ஊரடங்கு காரணமாக நாட்டில் கொவிட் நோய் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பிறகு நாட்டை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இன்று (14) ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த நான்கு வார பூட்டுதல் போதுமானது. இந்த காலகட்டத்தில் கொவிட் இறப்பு மற்றும் நோய்த் தொற்றுகள் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும், கொவிட் உடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு,கொவிட் தடுப்பூசிகள் கருத்தரித்தலை தடுக்கும் மற்றும் பாலியல் உறுப்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தினார்.