July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பின் அழகை மேம்படுத்த ஒளிமயமாக்கப்பட்ட புதிய களனி பாலம்

உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக ஒளிமயமாக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் களனி ஆற்றினதும் பாலத்தினதும் இயற்கை அழகை வெளிப்படுத்த இந்த ஒளிமயமாக்கல் பங்களிக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

வளர்ந்த நாடுகள் பாலங்களை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி அவை எமது நாட்டுக்கு ஏற்றதாக இருந்தால், புதிய களனி பாலத்திற்கு அந்த நுட்பங்களைப் பயன்படுத்த அமைச்சரால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி புதிய களனி பாலம் நேற்றைய தினம் பரீட்சார்த்தமாக ஒளிமயமாக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.