file photo: wikipedia
திமோர்- லெஸ்டே எனப்படும் கிழக்கு திமோர் அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு திமோர் அரசாங்கம், இலங்கையுடன் இராஜதந்திர தொடர்புகளை முறையான வகையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விருப்பத்தை இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல தற்போது அந்த நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
கிழக்கு திமோருடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும், அதேபோன்று இராஜதந்திர தளங்களில் இலங்கையின் தலையீடுகளில் அந்த நாட்டின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதும் முக்கியமாகும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கிழக்கு திமோருடன் முறையான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.