ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், முன்வைத்துள்ள வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் இலங்கை இன்று பதிலளிக்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்றைய தினம் இலங்கை அரசாங்கம் சார்பாக பதிலளிப்பார் என்று அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமான போது, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அரசாங்கத்தின் நிலைபாட்டை வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக வெளிவிவகார அமைச்சர், இன்று மாலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.