November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை குறைந்தாலும் உடனடியாக நாட்டை திறக்க முடியாது

கொவிட் வைரஸ் பரவல் மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவு நிலையொன்று காணப்படுகின்ற போதிலும் நாட்டை முழுமையாக திறக்கும் சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை.தற்போதும் நாடு எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவை வெளிப்படுத்துகின்ற போதிலும் திருப்திகரமான மட்டத்தில் நாடு உள்ளதென கூற முடியாது.தற்போது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகின்றது.

எனினும் கடந்த காலத்தில் நான்காயிரத்திற்கு அண்ணளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் இறுதி ஒரு வாரத்தில் மூவாயிரத்திற்கும் குறைவான வைரஸ் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எனவே நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளது என்று கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்

அதேபோல், சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் இருந்து இன்னமும் நாம் மீளவில்லை.அதற்கான காரணம் என்னவெனில்,டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையில் இருந்து நாடு இன்னமும் மீளவில்லை.அவ்வாறான நிலையில் தற்போது சிரமங்களுக்கு மத்தியில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.நூறு வீத பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற காரணத்தினால் இப்போது நாட்டை திறக்க முடியாது.எனினும் ஊரடங்கு காலம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்ற நிலையில்,இந்த வாரம் முழுவதும் நாட்டின் நிலைமைகளை அவதானித்து சூழ்நிலைக்கு அமைய தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.