முன்னாள் நிதி இராஜாங்க அமச்சர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று அவருக்கு இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி. லக்ஷ்மன் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால், முன்னதாக 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘மத்திய வங்கியின் ஆளுநர்’ பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.