அரசாங்கத்தின் அரிசி மற்றும் சீனி சுற்றிவளைப்புகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அரிசி மற்றும் சீனி சுற்றுவளைப்புகளை மேற்கொண்டு ஊடக கண்காட்சி நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதிகளை வரையறுத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும் அதன் விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதா? என்று திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் பெரிய தொழிலதிபர்கள் இறக்குமதி ஏகபோகத்தை உருவாக்கிக்கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் வியாபாரத்தில் இருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.