ஈஸ்டர் தாக்குதல் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர், 25 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இந்த வழக்கு தொடர்பில் ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தமித் தொடவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரட்ண மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம், வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு உத்தவிட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு வழக்கு விசாரணைக்கான அழைப்பாணை பிறப்பிக்குமாறு நீதிபதிகள் குழாம் அறிவித்தள்ளனர்.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களை அன்றைய தினம் அவர்களிடம் கையளிக்குமாறும் அறிவித்துள்ளனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்த சூழ்ச்சி செய்தமை, உதவி புரிந்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.