January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இத்தாலியில் பிரதமர் மகிந்தவை காணவந்த மக்கள்!

 

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ போலோக்னா நகரில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் பிரதமரை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நேற்று பிற்பகல் வெளியேறிய போது அவரை காண்பதற்காக பெருந்தொகையான மக்கள் ஹோட்டல் வளாகத்தின் அருகே ஒன்றுகூடியிருந்தனர்.

பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியாருக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக புகைப்படங்களை எடுப்பதற்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கும் முயற்சித்ததாக பிரதமரின் உடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜி 20 சர்வமத மாநாட்டில் உரையாற்றுவதற்காக சென்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு அவர்  நன்றி தெரிவித்து மரியாதை செய்தார்.

பிரதமர் நேற்று பிற்பகல் ஜி 20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியதுடன், இம்மாநாடு நாளை (14) வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.