February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை- சுவிட்சர்லாந்து ஒப்பந்தம்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உறுதிப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பிரதானி ராவ்ல் இம்பேச் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் காக்கும் திட்டத்துக்கு சுவிட்சர்லாந்து 4,650,000 ப்ரேங்க் நிதியுதவியும் வழங்க முன்வந்துள்ளது.

குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.