(Photo : wikipedia)
“சுராகிமு கங்கா” திட்டத்தின் கீழ் நாட்டின் பல நதிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வேலைத் திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெனிக் கங்கை திட்டம் தொடர்பான திட்டங்களுக்கு 128 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் முதல் கட்டமாக மொனராகலை பகுதியில் திட்டங்களை தொடங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதேபோல்,தென் மாகாணத்தில் பல ஆறுகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு 80 மில்லியனுக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் மாசுபாடான நதியாகவும் அதிகம் நீர் பெற்றுக் கொள்ளப்படும் நதியாகவும் கருதப்படும் களனி கங்கையின் பாதுகாப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.