எம்பிலிப்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி, பாலமொன்றில் இருந்து 20 பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று காலை இரத்தினபுரி இந்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்துள்ள குறித்த பார ஊர்தி வீதியில் பயணித்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை மோதித்தள்ளி, பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த பார ஊர்த்திக்கு பின்னால் வாகனமொன்றில் பயணித்த நபர் ஒருவர் அந்த விபத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பார ஊர்தியின் சாரதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.