இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களிடம் 5 சதவீதம் வரி அறவிடப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிடப்படும் வரியை கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக சேவைகளை நடத்திச் செல்வதற்கு ‘சமூக பாதுகாப்பிற்கான பங்களிப்பு’ என்ற பெயரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு இலட்சத்திற்கு மேல் மாத வருமானம் பெறுகின்ற அனைவரிடமிருந்தும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.