January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேராசிரியர் மலிக் பீரிஸ் சீனாவின் அறிவியல் பரிசை வென்றார்

தொற்று நோயியல் நிபுணரான பேராசிரியர் மலிக் பீரிஸிற்கு சீனாவினால் 2021 ஆம் ஆண்டிற்கான ‘Future Science’  பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மலிக் பீரிஸிற்கும் சீனாவின் பேராசிரியரான யுவன் க்வோக்-யுங் (Yuen Kwok-yung) இற்கும் எதிர்கால விஞ்ஞான பிரிவின் கீழ் இம்முறை இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வைரஸ்கள் தொடர்பிலான ஆய்வுகள் ஊடாக மேற்கொண்ட கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இருவருக்கும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.