July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உற்பத்தி பொருளாதாரத்திற்கு ஏற்ற இலக்கை நோக்கி நாட்டை நகர்த்துவதே இலக்கு- பஷில் ராஜபக்

தொழில் நிமிர்த்தம் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கும் நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டை உற்பத்தி பொருளாதாரத்திற்கு ஏற்ற இலக்கை நோக்கி செல்வதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.ஆகவே அதற்கு முன்னுரிமை வழங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கான தேவை அதிகரித்து வருகின்ற நிலையில், அதற்கான தடைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதற்கமைய தற்போது வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக செல்ல இருக்கும் நபர்களின் விமான ஆசன பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும்,அதேபோல் தேவைக்கேற்ப வெளிநாட்டு விமான நிறுவனங்களையும் உள்ளூர் விமான நிறுவனங்களையும் பயன்படுத்தி இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கைக்கான வெளிநாட்டு கையிருப்பை தக்க வைக்கும் பாரிய பணிகளில் எமது வெளிநாட்டு பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.ஆகவே அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது உரிய நிறுவனங்களின் கடமையாகும்.

நாட்டை உற்பத்தி பொருளாதாரத்திற்கு ஏற்ற இலக்கை நோக்கி செல்வதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆகவே அதற்கு முன்னுரிமை வழங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியை பராமரிக்கும் அதே வேளையில்,பொருளாதாரத்தை துரித வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.