July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2,417 உடல்களை தகனம் செய்ய 120 மில்லியன் ரூபா செலவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக 120 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி. கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் தகனம் செய்யப்பட்ட 2,417 உடல்களுக்காக இந்த நிதி செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

69 உள்ளூராட்சி சபைகளுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி தென் மாகாணத்தில் 537 உடல்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 488 உடல்களும், மேல் மாகாணத்தில் 399 உடல்களும் , வடமேல் மாகாணத்தில் 260 உடல்களும் , மத்திய மாகாணத்தில் 260 உடல்களும் , ஊவா மாகாணத்தில் 171 உடல்களும் , வட மத்திய மாகாணத்தில் 100 உடல்களும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 71 உடல்களும் குறித்த காலப்பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, தகனம் செய்யப்பட்ட ஒரு உடலுக்கு 5,000 ரூபா என்ற அடிப்படையில், முதற்கட்டமாக 12 கோடியே 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த நேரத்திலும் கொரோனா உடல்களை தகனம் செய்யவதற்கு செலவாகும் பணத்தை எந்தவித தாமதமும் இன்றி அந்தந்த உள்ளூராட்சி சபைகளுக்கு அனுப்புமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.