May 22, 2025 21:41:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் நிலநடுக்கம்!

Earth Quake common Images

இலங்கைக்கு அருகில் தெற்குக் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மிற்றர் தூரத்தில்,கடலுக்கு அடியில் 300 கிலோ மீற்றர் ஆழத்தில் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பிரதேசங்களில் இரண்டு தடவையில் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகியிருந்ததுடன் அது தொடர்பில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.