இலங்கையில் மடிக்கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
இந்தப் பொருட்களின் விலைகள் 20,000 ரூபாய் முதல் 120,000 ரூபாய் வரை அதிகரிக்கத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்பவர்களும், மடிக்கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் பிற மின் சாதனங்களை விற்கும் பல முக்கிய நிறுவனங்களும் இவ்வாறு விலை அதிகரிப்பை செய்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சட்டுகின்றனர்.
32 அங்குல தொலைக்காட்சி பெட்டியின் விலை 35,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு மடிக்கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளுக்கு நாட்டில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கம் விதித்துள்ள புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சார சாதனங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தோற்றியுள்ளதாக இறக்குமதியாளர்களும் விற்பனை முகவர்களும் குறிப்பிடுகின்றனர்.
இறக்குமதி வைப்புத்தொகை 100 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக ஒரே நேரத்தில் 1,000 மடிக்கணினிகள் அல்லது கைத்தொலைபேசிகளை இறக்குமதி செய்யும் வாய்ப்பு 200 ஐ விடவும் குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை சதகமாக பயன்படுத்தியுள்ள சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கிவிடுவதாவும் மடிக்கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.