அரசாங்கத்தினால் அவசரகால சட்டத்தின் கீழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒழுங்குவிதிகளை கொண்டுவருமாக இருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் அதன்மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று அதன்போது ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரிசியை தவிர மற்றைய அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறாக பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வியாபாரிகளிடம் தற்போது பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.