February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மகிந்த இன்று உரையாற்றுவார்

இத்தாலி போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலிக்கு பயணமானார்.

அவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினரும் சென்றிருந்தனர்.
இதன்படி இன்று ஆரம்பமாகவுள்ள ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் ஆரம்ப உரையாற்றவுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த இராஜதந்திர சந்திப்பின்போது இத்தாலி ஜனாதிபதி மரியோ ட்ராகி, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி பொருட் பாஹோர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.