January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளது

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கொவிட் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்தக் குழு கூடி விரிவாக ஆராய்ந்துள்ளது.

கல்வி அதிகாரிகள், சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள், தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.