July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்துக்குள் அனுமதி

இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கான தடையை நாளை (11) முதல் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

அதன்படி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு கொவிட் -19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் இவ்வாறு தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக தாமதமான துபாயில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 வர்த்தக கண்காட்சிக்கு சில வாரங்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எனினும் பயணிகள் நாட்டிலிருந்து திரும்புவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

பல்வேறு பி.சி.ஆர் சோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தாய்லாந்து ஒக்டோபரில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை பாங்கொக்கிற்குள் அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று நோயால் நலிவடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத் துறையை முன்னேற்றும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

உலகளாவிய தொற்று நோய்க்கு முன்னர், சுற்றுலா துறையானது தாய்லாந்தின் தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை ஈட்டிந் தத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.