இலங்கையில் மேலும் 157 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களிடையே 87 பெண்களும் 70 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 130 பேரும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 23 பேரும் 30 வயதிற்குட்பட்ட 4 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,882 பேர் இன்று (11) இனங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு மாலை 6.10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 82,360 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 60,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 82,360 ஆக உயர்வடைந்துள்ளது.