இலங்கையில் 309 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்த 2 பேருக்கும், கட்டுநாயக்கவில் 22 பேருக்கும், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 97 பேருக்குமே இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 287ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை, 2,712 பேர் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.