இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், விவேகமான கொள்கைகள் மூலம் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 4.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்றால் ஏன் உணவு விநியோக அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் சில மோசமான வர்த்தகர்கள் செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி, இலாபம் ஈட்டப் பார்ப்பதாகவும், அதனைத் தடுப்பதற்கே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பதிலளித்துள்ளார்.