July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் அவர் கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.