சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பொது மக்கள் நலன் கருதி செயற்பட்ட ஒருவர் என்று சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு பாரதூரமான குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ரஞ்சன் ராமநாயக்க விடயத்தில் கவனம் எடுக்குமாறு சந்திரிக்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஞ்சனுக்கு விடுதலை கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தேசிய சிறைக் கைதிகள் தினத்தில் ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.