
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாக செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது மிகப் பலவீனமான மட்டத்தில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது அதிகமான வாகனங்களும் மக்களும் பாதையில் இருந்ததாகவும், அவ்வாறான ஊரடங்கில் பயனில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சுதந்திரமாக பாதைக்கும் வரும் பலவீனமான ஊரடங்குடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய தேவைகள் இன்றி வீதிகளில் நடமாடுவோருக்கு சட்;ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.