July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீங்கியதும் பஸ்கள் இயங்காது”: பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

தனியார் பஸ் ஊழியர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு  நீக்கப்பட்டாலும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக  பஸ்கள் இயக்கப்படாததால், சுமார் 50,000 பஸ் ஊழியர்களும் 11,000 பஸ் உரிமையாளர்களும் எந்த வருமானமும் இன்றி மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்விளைவாக, அவர்களின் குடும்பங்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கெமுனுவிஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசாங்கம் இதுகுறித்து கவனம் செலுத்தி பஸ் ஊழியர்களுக்கு நிவாரணப் பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னர் பஸ்கள் இயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.