Photo: Facebook/tourismsrilanka.gov.lk
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த 25 தீவுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஊடக கூட்டமைப்பான மெரிடித் கோப்ரேஷனால் வெளியிடப்படும் , “Travel+Leisure” என்ற சஞ்சிகையில் உலகின் முதல் 25 தீவுகளின் தரப்படுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த தரப்படுத்தலில் இலங்கை 88.20 மதிப்பெண்களுடன் பட்டியலில் 24 வது இடத்தில் உள்ளது.
95.50 புள்ளிகளுடன் கிரீஸ் தீவான மெலோஸ் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் 95.47 மற்றொரு கிரீஸ் தீவான ஃபோலேகாண்ட்ரோஸ், உள்ளது.
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 91.69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் போர்த்துக்கல் நாட்டின் மடிரா தீவு 91.56 புள்ளிகளுடன் நன்காவது அடத்தையும் பெற்றுள்ளன.
91.24 புள்ளிகளை பெற்று இந்தியவின் அந்தமான் தீவு 5 ஆவது இடத்திலும் மாலைத்தீவு 89.55 புள்ளிகளுடன் பட்டியலில் 14 ஆவது இடத்திலும் உள்ளன.
“Travel+Leisure” இணைத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் சுற்றுலா பயணிகளின் வாக்குகளுக்கு அமைய இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த தீவுகள் விருதுக்கான வாக்கெடுப்பு ஜனவரி 11 முதல் மே 10 வரை இடம்பெற்றதாக சஞ்சிகை தெரிவித்துள்ளது.