இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் பௌர்ணமி தினத்தை தவிர ஏனைய அனைத்து தினங்களிலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க கொவிட் தடுப்பு செயலணியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
தங்களுடைய உற்பத்திகளைச் சந்தைக்கு விநியோகிக்க முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளாகி உள்ளனர். அதனால் நாட்டிலுள்ள அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்று அந்த செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.