June 13, 2025 8:51:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுக்கு கொவிட் தொற்று உறுதி!

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அண்மையில் அமைச்சர் பந்துலகுணவர்தனவுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.