July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்கள்

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 95.8 வீதமானவர்கள்  டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்று  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாட்டின் பல மாகாணங்களில் கொவிட் தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்னர்.

நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக கொவிட் வைரஸின் மாறுபாடுகளை கண்டறிவதற்கான ஆய்வினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் அராய்ச்சி குழு மேற்கொண்டது.

இது தொடர்பான ஆய்வு வைத்தியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே டெல்டா வைரஸ் பரவலானது 84 வீதம் முதல் 100 வீதம் வரையில் காணப்பட்டதாகவும் ஆராச்சியிலிருந்து தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளனர்.