July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இத்தாலி பயணமானார்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இத்தாலி பயணமானர்.

பிரதமரும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இத்தாலிக்கு புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்தின்போது பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறான சந்திப்பு நடக்காது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.