January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயுத கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் இந்தியாவில் கைது!

ஆயுத கடத்தல் சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

இந்தியாவின் கேரளா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 300 கிலோ கிராம் போதைப்பொருளுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இலங்கைப் பிரஜையான அரசரத்தினம் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க இந்திய புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.