June 11, 2025 11:57:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இஷினி விக்கிரமசிங்க இதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்தார். ஆனால் ஜனாதிபதி அந்த கோரிக்கையை நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.